டெல்லியில் இருந்து அமித்ஷா விதித்த கெடு.! கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.!! பதறும் அமைச்சர்கள்.!! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆட்சி புரிய உதவி செய்த மத்திய அரசிலும்., மராட்டிய மாநில அரசிலும் சிவசேனா கட்சியின் பங்கு அதிகளவு உள்ளது. இந்நிலையில்., கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதாவும் - சிவசேனாவும் விளங்கி வரும் வேலையில்., காங்கிரசை காட்டிலும் அதிகளவு பாரதிய ஜனதா கட்சியை சிவசேனா கட்சியானது விமர்சித்து வருகிறது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில்., சிவசேனா கட்சியின் பொதுக்கூட்டமானது பண்டப்பூரில் நடைபெற்ற வேலையில்., சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசியும்., ஊழல் கட்சியுடன் கூட்டணி ஏன் வைக்க வேண்டும் என்று கடுமையான கேள்வியை முன்வைத்தார்.  

மேலும்., கடந்த பாராளுமன்ற தேர்தலை இரு கட்சியும் இணைந்து சந்தித்த வேலையில்., தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும்., அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் இவர்களின் கூட்டணி நீடிக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்., பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா., டெல்லியில் உள்ள மராட்டிய மாநிலத்தின் நாடாளுமன்ற அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில்., சிவசேனா கட்சியானது கூட்டணிக்கு வரவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களுக்கு தனித்து போட்டியிட தயாராக கூறி அறிவுத்துமாறு ஆலோசித்துள்ளார். 

கூட்டணி கட்சியான சிவசேனா கூறுவதற்கெல்லாம் நம்மால் ஆட இயலாது., வரும் 31 ம் தேதிதான் அவர்களுக்கு கடைசி தேதி. ஜனவரி 31 ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை., தனித்து நின்றே இந்த தேர்தலை சந்தித்து வெற்றியடையலாம். தனித்து நிற்பது குறித்து நீங்களும் முடிவு செய்யலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு கூறியுள்ளார். 

இந்த பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் எம்.பி அவர்களிடம் கேட்ட போது., இந்த கூட்டணி கெடுவை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தாரா? அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா எங்களுக்கு விதித்துள்ளாரா?. இந்த கேள்விக்கு அதிகாரபூர்வ பதிலை முதலில் அவர்கள் அளிக்கட்டும்., பின்னர் அதற்க்கான பதிலை நாங்கள் அளிக்கிறோம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithsha angry to shiv cena party activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->