பாமகவிற்கு எத்தனை சீட் தெரியுமா? அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்! விட்டுக்கொடுத்த பாமக!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு யார் யாருடன் கூட்டணி? எந்த கட்சி எந்த அணியில் உள்ளிட்ட பல கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் பதில் கிடைத்துவிடும் என எதிர்பார்த்தது போலவே அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாட்டாளி மக்க்ள் கட்சி. 

அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்கும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்த நிலையில். பாட்டாளி மக்கள் கட்சியை எந்த அணி இழுக்கும் என்று கடுமையான போட்டி நிலவிய நிலையில், தங்கள் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி இன்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பாமக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதன் மூலம் அதிமுக பாமக கூட்டணி உறுதியானது. தற்போது எத்தனை சீட் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளது. 

இந்த கூட்டணியில் பாமகவிற்கு 7 இடங்கள் எனவும்,ஒரு ராஜ்ய சபா எனவும் உறுதியளித்துள்ளார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்.  அதே சமயத்தில் அடுத்து நடைபெற உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என கூறப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk with pmk in lok sabha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->