#BREAKING :: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டாக்டர். கிருஷ்ணசாமியிடம் ஆதரவு கோரியது அதிமுக...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசியல் நிகழ்வுகளை தமிழகம் சந்தித்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர் என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்திற்கும் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜனுக்கும் இடையே கடும் போட்டி நிலவை வருகிறது. 

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் விட்டுக் கொடுப்பதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK SP Velumani meet with DrKrishnasamy for Erode East byelection


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->