அதிமுக எதுக்கு போட்டியிடுறாங்கனு அவங்களுக்கே தெரியாது..அன்புமணி ராமதாஸ் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்திவருகின்றனர்.

அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு காஞ்சிபுரம், விழுப்புரம், ஆரணி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தர்மபுரி, திண்டுக்கல், அரக்கோணம் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், அதிமுக இந்த தேர்தலில் எதற்கு போட்டிருக்கிறது என்று கூட தெரியாமல் போட்டியிடுகிறது. அதிமுகவிற்கு போடும் ஓட்டு செல்லா ஓட்டு. பாமக கட்சி இல்லாமல் இருந்தால் டெல்டா என்ற ஒன்று இல்லாமலே போயிருக்கும். டெல்டாவை அழைக்க பார்க்கும் கட்சிகளுக்கு மதியில் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கூறி வலியுறுத்தியது பாமக. 57 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு வரும் அதிமுக, திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk why contest to election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->