கோவையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி செய்யப்போகும் சம்பவம்.. தொண்டர்களுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "வரும் டிசம்பர் 2ம் தேதி, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.

சிவானந்தா காலணியில் நடக்க உள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடக்கும். இந்த போராட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சிறப்புரையாற்ற உள்ளார்" என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தின் 11 தொகுதிகள், அண்டை மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை திரட்டி வர கட்சி நிர்வாகிகள் தயாராகியுள்ளனர்.

இன்று நடக்க உள்ள இந்த போராட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக இருக்கும் என்றும், கோவை மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையிலும் அமையும் என்றும் அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK SP Velumani and EPS protest today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->