ஆறு பேர் யார்? இபிஎஸ் தலைமையில் எம்எல்ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் இருக்கக்கூடிய 69 மாவட்டச் செயலாளர்கள், 61 சட்டமன்ற உறுப்பினர்கள், 56 தலைமை கழக நிர்வாகிகள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக இருக்கக்கூடிய 75 மாவட்டங்களில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஆறு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் உச்ச நீதிமன்ற வழக்கு, ஓபிஎஸ் தரப்பின் நெருக்கடி, தமிழக அரசு தரப்பில் இருந்து வரும் நெருக்கடி உள்ளிட்டவைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக அதிமுகவின் பொன்விழா நிறைவு விழா அக்டோபர் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் அதிமுகவின் 51வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Meet 10oct2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->