குடிபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர்.! உடல்கள் துண்டான நிலையில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.!!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு., அதற்கு பின்னர் பிரசவ வார்டிற்குள் அழைத்து சென்ற போது அங்கு ஆண் செவிலியர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். 

அந்த நேரத்தில் குழந்தையை செவிலியர் பொறுமை காக்காமல் வேகமாக இழுந்ததன் காரணமாக குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக பிரிந்து வெளியே வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர் குழந்தையின் உடலை வேகமாக மறைத்துவைத்து விட்டு., குழந்தை பிரசவ நிலையில் இருப்பதாகவும்., தாயும் சேயும் அபாய நிலையில்  இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்ல கூறி ஆலோசனை வழங்கியுள்ளார். 

தனது மனைவிக்கும் குழந்தைக்கும் நடந்ததை அறியாத கணவர் அவசர அவசரமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்., மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., குழந்தையின் தலை பாகம் மட்டும் தாயாரின் படிநிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இந்த விசயத்தை உடனடியாக அவரது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தி., உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் தலையை வெளியே எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கணவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக செவிலியரின் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்., உடனடியாக விசாரணை மேற்கொண்டு குழந்தையின் உடலை கைப்பற்றினர். மேலும்., அவர் குடி போதையில் பிரசவத்திற்கான சிகிச்சை மேற்கொண்டார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. 

இந்நிலையில்., அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவமானது அந்த மாநில மக்கள் மட்டுமல்லாமல்., இந்தியா மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்., சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The nurse who had seen the delivery in drunkenness in rajathan hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->