பா.ஜ.கவுக்கு 150 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பு கிடையாது - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்திரபிரதேசத்தின், காசியாபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், தேர்தல் கருத்தியல் சார்ந்தது. ஒருபுறம் ஆர்.எஸ் எஸ் மற்றும் பா.ஜ.கவினர் ஆகியோர் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நடைமுறையை அழிக்க முயற்சிக்கின்றனர். 

மறுபுறம் இந்திய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகமாக அவற்றை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். 

இந்த தேர்தலில் வேலைவாய்ப்பு, பணவீக்கம் பெரிய விவகாரமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க இவற்றில் இருந்து திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. 

இந்த விவகாரங்கள் குறித்து பிரதமரோ அல்லது பா.ஜ.கவும் பேச தேவையில்லை. பா.ஜ.க 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என தற்போது நினைக்கிறேன். 

ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் அறிக்கைகளில் நாங்கள் முன்னேறி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi interview


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->