நாடு முழுவதும் ஒரே நோய் பரவுகிறது... ராகுல் காந்தி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை என்னும் நோய் நாடு முழுவதும் பரவுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நோயால் எல்லா மாநிலங்களும் அவதிப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

ஒடிசா மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. அங்கு மக்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிலிருந்து 40 சதவீதம் இளைஞர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சமயத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 30 லட்சத்திற்கும் அதிகமான ஒடிசா இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். மோடியின் ஆதரவால் வெளியில் இருந்து வந்த 30 கோடீஸ்வரர் தொழிலாளர்கள் மாநிலத்தின் வளங்களை சுரண்டுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi criticism issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->