PUBG கேமுக்கு அடிமையாகி வாலிபர் செய்த வேலை! சோகத்தில் மூழ்கிய குடும்பம்! வெளியான காரணம்! - Seithipunal
Seithipunal


மும்பையில் நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயது வாலிபர் ஒருவர், பெற்றோரிடம் பப்ஜி(PUBG) கேம் விளையாடுவதற்காக  ரூ.37000 மதிப்புடைய விலை உயர்ந்த செல்போன்  கேட்டுள்ளார். இதனை பெற்றோர் வாங்கித்தர மறுத்துவிட்டனர்.


 
இதனையடுத்து பெற்றோருக்கும் வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை தொடந்து பெற்றோர் ரூ.20,000-க்குள் செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து அந்த வாலிபர் வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில்,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நான்கு பேர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டினால் பல குழந்தைகள் தேர்வுகளில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது எனவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்து கூறிவருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயதுடைய மாணவன், தனது தாயின் உதவியோடு மும்பை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUBG Game Addiction Youth man Suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->