இந்தியாவை பிரகாசமான இடமாக உலகம் கருதுகிறது - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நவம்பர் 2 முதல் நவம்பர் 4 வரை நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்பு உரையாற்றிய பிரதமர் மோடி,

பெங்களூரு "பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம்" ஆகிய இரண்டும் இருக்கும் இடம் என்றும், "இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

திறமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது பெங்களூரு தான். உலகளவில் நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக கருதுகின்றனர்.

மேலும் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த எங்கள் அடிப்படைகளை உறுதிப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says World considers India as bright spot


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->