டான்ஸ் பார்களில் பெண்கள் இனி ஆடலாம்.! கட்டுப்பாடுடன் அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில அரசு, இளம் தலைமுறையினரை பழாக்குவதாக கூறி அம்மாநிலத்தில் உள்ள மதுபான பார்களில் டான்ஸ் ஆடுவது மற்றும் பல்வேறு விடயங்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு விதித்த தடையை, உச்சநீதிமன்றம் இன்று நீக்கி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் டான்ஸ் பார்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு, மகாராஷ்டிர அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இளம் தலைமுறையினர் கெட்டு பழாக்குவதாக கூறியா மாநில அரசு, மகாராஷ்டிராவில் உள்ள மதுபான பார்களில் டான்ஸ் ஆடுவது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் விதித்து, தடை விதித்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், டான்ஸ் பார்களில் முழுக்க முழுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வது என்பது தவறு என்று கருத்து தெரிவித்தது. 

இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 

* டான்ஸ் பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கு தடையில்லை,  

* பெண்கள் நடனமாடும் மேடையும், மது அருந்த அமரும் இடமும் அருகருகே இருக்கலாம்.

* பாரில் நடனமாடும் பெண்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாம்.

* நடனமாடும் பெண்களின் மீது பணத்தை வாரி இறைக்க கூடாது. 

* டான்ஸ் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,  மகாராஷ்ட்ர மாநில அரசின் உத்தரவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN SV NEW ORDER IN DANCE BAR DANCE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->