இந்தியாவை நெருங்கும் மிகப்பெரிய ஆபத்து! சுதாரிக்குமா இந்தியா?! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏறக்குறைய  அனைத்தும் எதிரி நாடுகளாக மாறிக்கொண்டுள்ளன. அல்லது சீனா மாற்றிக்கொண்டுள்ளது என்றும் சொல்லலாம். சமீபத்தில் மாலத்தீவு நாட்டில் அவசர நிலை பிரகடனம் படுத்தினர். அப்போது இந்தியாவின் உதவி வேண்டாம் சீனாவின் உதவியே போதும் என்றது. 

maldives india relations க்கான பட முடிவு

இதன் தொடர்ச்சியாக தற்போது, இந்தியாவுடன் உறவு விரிசல்களின் ஒரு பகுதியாக இந்தியா பரிசாக வழங்கிய ஹெலிகாப்டரை திருப்பி அனுப்பியுள்ளது. இந்தியாவுடன் நட்பு நாடாக மாலத்தீவு தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் பதவியேற்ற பின் உறவுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அப்துல்லா யாமீன் சீனா மற்றும் பாகிஸ்தான் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

maldives india relations க்கான பட முடிவு

இந்நிலையில் மாலத்தீவிற்கு இந்தியா பரிசாகக் கொடுத்த 2 ஹெலிகாப்டர்களில் ஒன்றை மாலத்தீவு திருப்பி அனுப்பியுள்ளது. மாலத்தீவு டோர்னியர் ஹெலிகாப்டர்களை கேட்டதாகவும், அதற்கு பதிலாக இந்தியா இலகு ரக ஹெலிகாடர் வழங்கப்பட்டதாலேயே திருப்பி அனுப்பப் பட்டதாகவும் மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் நமக்கு எதிராக சீனாவுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india will face problem by near country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->