பிரபல பின்னணி பாடகர் கே.கே. காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல பின்னணி பாடகர் கே.கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்  தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

இவர் தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கே.கே.  அவர்கள் விக்ரம், விஜய், விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.

கே.கே.வின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவருடைய திடீர் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous singer kk died


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->