கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து மாதங்கள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.!!  - Seithipunal
Seithipunal


பெண்கள் இல்லத்தில் திருமணம் முடிந்து கர்ப்பிணியாக இருக்கும் பொது அந்த பெண்ணை., அவரது கணவர் மட்டுமல்லாது கணவரின் குடும்பத்தார் மற்றும் பெண்ணின் குடும்பத்தார் தோலில் தூக்கி வைத்து சுமக்காத குறையாக அவரையும்., அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாப்பார்கள். 

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு முதல் மாதத்தில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில்., முதல் மாதம் முதல் ஐந்து மாதம் வரை உடலில் ஏற்படும் பிரச்சனை குறித்து இந்த பதிவில் காண்போம். 

கர்ப்பிணி பெண்களின் முதல் மாதம்: 

பெண்கள் கர்ப்பமாக இருக்க முதல் மாதத்தில் அடிவயிறானது கடுமையான வலிக்கு உண்டாகும். இந்த நேரத்தில் பித்தவாயு பிரச்சனையின் காரணமாக வயிற்றுவலியின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் ஏற்படும் வலியை தடுப்பதற்கு தாமரை பூ., குட்டி விளா  இலையை சுமார் 50 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு., சுமார் 15 கிராம் சந்தன தூளுடன் சேர்த்து நீர் சேர்த்து அரைத்து 200 மிலி அளவிற்கு பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் கருச்சிதைவு பிரச்சனை நீங்கும்., வயிறு வலியும் குறையும். 

கர்ப்பிணி பெண்களின் இரண்டாம் மாதம்;

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் இரண்டாவது மாதத்தில் உடல் முழுவதும் வாயு கோளாறுகள் ஏற்பட்டு உடல் வலியானது ஏற்படும். வயிற்றில் வேதனையும் அதிகரிக்கும். இந்த காரணத்தினாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு 10 வெற்றிலை., 10 தாமரை இதழ் சேர்த்து அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வந்தால் வயிற்று வலியானது நீங்கும்.

கர்ப்பிணி பெண்களின் மூன்றாம் மாதம்:

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் மூன்றாம் மாதத்தில் கருப்பை பலவீனத்தின் காரணமாக திடீர் வயிற்று வலி மற்றும் வயிறை கவ்வி பிடிப்பது போன்று இருக்கும். இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கும் முடிந்தளவு தவிர்ப்பதற்கும் 15 கிராம் வெள்ளை தாமரை பூவை எடுத்து கொண்டு., 15 கிராம் செங்கழு நீரை எடுத்து 200 மிலி அளவுள்ள பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கும்., குழந்தையும் ஆரோக்கியமாக வளரத் துவங்கும். 

கர்ப்பிணி பெண்களின் நான்காம் மாதம்:

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நான்காம் மாதத்தில் கருப்பையில் இருந்து இரத்தம் வெளியேற வலி ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் கரு அழிவிற்கு இது அறிகுறியாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்கு 15 கிராம் கோரைக்கிழங்கை எடுத்து கொண்டு., 15 கிராம் நொச்சி இலையுடன் சேர்த்து 200 மிலி அளவுள்ள பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் சிசு அழியாமல் பாதுகாக்கும்.

 

கர்ப்பிணி பெண்களின் ஐந்தாம் மாதம்:

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஐந்தாவது மாதத்தில்., வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில்., அள்ளித்தாமரைப்பூ., விலாயிச்சை வேறை சுமார் 15 கிராம் அளவுடன் சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் சிசு எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வளர துவங்கும்.

இந்த செய்தியை படிப்பதற்கு இங்கே அழுத்தவும்...  கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து மாதங்கள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies first five month problem and solving methods naturally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->