திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக! பரபரப்பை உண்டாக்கிய காங்கிரஸ் தலைவர்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலை எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது இன்னும் முடிவாகாத நிலையே சென்று கொண்டிருக்கிறது. முடிவாகிவிட்டதாக கருதப்பட்ட திமுக காங்கிரஸ் கூட்டணியும் முடிவு பெறாமல் சவ்வு போல இழுத்துக் கொண்டு செல்கிறது. அதிமுக பாஜக கூட்டணியும் முடிவு கிடைக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த இரண்டு அணிகளுமே, எப்படியாவது பாமகவை தங்கள் அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மும்முரமாக வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாமகவோ மிகவும் ரகசியமாக தாங்கள் யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பிலும் இருந்தும் பாமக எங்கள் அணியில் வரும் என்று சில தலைவர்கள் கருத்துகளை கூறி கொண்டுள்ளார்கள். ஆனால் பாமக தரப்பிலிருந்து உறுதியான தகவல்கள் இதுவரை வரவில்லை. 

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ய டெல்லி சென்ற ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்திக்க மறுத்த ராகுல் காந்தி, பின்பு கனிமொழியை திமுக பிரிதிநிதியாக வரவைத்துகூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தலைவர்களிடையே நடத்திவருகிறார்கள். 

இதில் காங்கிரசின் முக்கிய கோரிக்கையாக பாமக இந்த அணியில் இருக்க வேண்டும் என்பதே என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது என வசந்தகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் முடிவை அறிவிக்க வேண்டிய பாமக மௌனம் காத்து வருகிறது. 

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து அதில் இருந்து தற்போதைய சூழலில் பின்வாங்கி கூட்டணி வைத்துதான் போட்டியிடவோம் என்று பாமக அறிவித்த நிலையில், இரண்டு கட்சிகளுமே பாமக வந்தால் நாங்கள் ஏற்க தயாரில்லை என்று அறிவிக்கவும் தைரியமில்லாமல்  தான் இருக்கிறார்கள். ஏனெனில் வெற்றிக்கான முக்கிய காரணியாக பாமக இருப்பதால் அவர்களும் பாமகவை எதிர்பார்த்து தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vasanthkumar said may be pmk will join dmk congress coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->