லயோலா கல்லூரி பரபரப்பு அறிக்கை! கருத்துக்கணிப்பு எதுவுமே நடக்கவில்லை! அப்படி ஒரு துறையே இல்லை! - Seithipunal
Seithipunal


இன்று காலை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகள் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி எந்த அணி வெற்றி பெறும் என்ற ஒரு கருத்து கணிப்பானது, பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு என்று கூறிக்கொண்டு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. 

இவர்களின் கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து பொய்த்து வந்தாலும், தொடர்ச்சியாக அவர்கள் ஒரு சார்புக்கு சார்பாகவே  வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். ஒரு சார்பு தன்மையுடன் இருந்தாலும் இதனை யாரும் பெரிதுபடுத்தாமல் கடந்து செல்கின்றனர். 

இந்த நிலையிலும் இந்த கருத்துகணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்புக்கும்  தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அந்த கல்லூரி அளித்துள்ள அறிக்கையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) மாநிலம் முழுதும் கருத்துக்கணிப்பை நடத்தி இறுதி முடிவுகளை இன்று தெரிவித்துள்ளது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில் பண்பாடு மக்கள் தொடர்பாகம்  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும், எங்கள் நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், நடைபெற உள்ள தேர்தல் மூலம் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான ஆய்வறிக்கைகளுக்கும் எங்களது நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில தேர்தல் தொடர்பாக எங்கள் கல்லூரி நிறுவனம் சார்பில் எவ்வித கருத்து கணிப்பும் ஆய்வறிக்கைகளும் வெளியிட வில்லை என்பதை சுட்டிக் காட்டுவது என் கடமை. இது போன்றதொரு கருத்து கணிப்புகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட எங்கள் நிர்வாகத்தில் எந்த துறைகளும் தற்போது இல்லை என்று உறுதியளிக்கிறோம். 

இதுபோன்று வரும் கருத்து கணிப்புகளை லயோலோ கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பு தொடர்ந்து யாருக்கு சாதகமாக கருத்து கணிப்புகளை வெளியிடுகிறது என்பதனை அனைவரும் அறிவார்கள். இந்த முறை அவர்களின் கருத்துக்கணிப்பு கடுமையான நகைச்சுவை விமர்சனங்களை வைத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

loyalo college statement for election prediction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->