திமுகவிற்கு காத்திருக்கும் மாபெரும் சவால்! இன்று தான் முக்கிய பேச்சுவார்த்தை! எகிறும் எதிர்பார்ப்பு!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன் பிறகு திமுகவின் தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை திமுக நேற்று முதல் நடத்தி வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய கட்சியாக தற்போது விடுதலை சிறுத்தைகளுடன் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகள் எப்படியோ தெரியவில்லை, ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை திமுகவிற்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 

ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஐந்து தொகுதிகள் கேட்க, அப்போது, தற்போதைய திமுக பொருளாளர் ஆக இருக்கும் துரைமுருகன் நாலு  மாவட்டங்களில் கட்சியை வைத்துக்கொண்டு ஐந்து சீட்டு வேண்டுமா? என்று கேட்டதாகவும், அதிகபட்சம் ஒரு தொகுதி தான் அதுவும் சிதம்பரம் மட்டும்தான் என்று ஒதுக்கியதாகவும் கூறியதால், கோபமடைந்த திருமாவளவன்  அறிவாலயத்தின் பின்புறமாக வெளியேறினர் என்ற செய்தி வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திமுக தலைவர் கலைஞர் மற்றும் செயல் தலைவர் மு க ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக தெரியப்படுத்தினார்கள். 

இதில் சற்று யோசனைக்கு பிறகு திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அழைத்து, திருவள்ளுவர் தொகுதியை ஒதுக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் என அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தான் இந்த வருடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக தொகுதி கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் 3 தொகுதிகளை கேட்டு உள்ளதாகவும் அது சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மூன்றும்  தனித்தொகுதிகள் எனவும் தெரிகிறது. 

இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு சிக்கலாக காஞ்சிபுரம் தொகுதியை ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் ம்திமுகவும் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டதை கொடுக்க வில்லை என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு கடந்த முறை போலவே இந்த முறையும் திமுக தலைவரின் உருவபொம்மையை எரித்தாலும் எரிப்பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால் திமுக தரப்பினர் சற்று பதட்டமாகவே இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk vck coalition speech in arivalayam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->