தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை! முழு விவரம் இதோ...
Tamil Nadu Government Hospitals Work details
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி்: ASSISTANT SURGEON(GENERAL)
காலியிடங்கள்: 2553
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுபிரிவினருக்கு 37 வயதிற்க்குள்
எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம், டிஎன்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 59 க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினர் 47 க்குள், முன்னாள் ராணுவத்தினர் 50 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர பிரிவினருக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.5.2024
English Summary
Tamil Nadu Government Hospitals Work details