தமிழராக பிறக்கும் ஒவ்வொருவரும், தெரிந்து கொள்ள வேண்டிய கலைக்களஞ்சியம் - எங்கே தமிழ்? - Seithipunal
Seithipunal


"தமிழைத் தேடி" பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை செல்லும் முன்பாக, சென்னையில் வெளியிட்ட நூல், "எங்கே தமிழ்?". இந்நூலினை மருத்துவர் ராமதாசு அவர்களே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். 

சென்னையில் இருந்து மதுரைக்கு தமிழைத் தேடிச் செல்வதன் நோக்கம் என்ன? அதன் தேவை என்ன இருக்கிறது? என்பது குறித்து முழுவதுமாக விளக்கும் நூலாக இந்நூல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் மொழியின் சிறப்பில் ஆரம்பித்து, தமிழ் இலக்கியங்களின் வாயிலாக ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் என்ன? சங்க காலத்தில் மன்னர்கள் எவ்வாறு தமிழ் வளர்த்தனர் என்பது குறித்தும் விரிவாக பேசுகிறது.

கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற 1937 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறும், அதில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் தாளமுத்து வரலாறும் முழுமையாக இடம்பெற்றிருக்கிறது. அன்னைத் தமிழுக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் 500 பேர் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது. 

ஆங்கிலப் பள்ளிகளின் வளர்ச்சியினால் தமிழின் வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது? தமிழுக்காக சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை நடத்தியது ஏன்?  உயர்நீதிமன்றத்தில் தமிழ், தமிழ் ஆட்சி மொழி சட்டம், செம்மையாக இயங்காத செம்மொழி நிறுவனம் போன்றவற்றில் கைக்கெட்டிய தமிழ் வாய்க்கு எட்டாமல் முடங்கிப் போனதன் வரலாறை ஆழமாக பேசுகிறது இந்நூல். 

தமிழுக்காக அரசியல் களத்தில் செய்த போராட்டங்களும், மருத்துவர் ராமதாசு தொடங்கிய இயக்கங்கள் நடத்திய தமிழ் வளர்ச்சி பணிகளும் நிறைந்த முழுமையான தொகுப்பாக வெளியாகி இருக்கிறது இந்நூல். 

தமிழை ஏன் வளர்க்க வேண்டும்? வளர்க்க வேண்டிய கடமைகள் நமக்கு என்னென்ன இருக்கிறது? என்பது குறித்தும் இறுதியாக சொல்லியிருக்கிறார் நூலின் ஆசிரியர். 333 பக்கங்களை கொண்ட இந்த நூலினை மருத்துவர் ராமதாசு எழுதியிருக்க, புதிய அரசியல் பதிப்பகம் ஆனது ரூபாய் 350 விலையில் வெளியிட்டுள்ளது.  

இன்றைய தலைமுறை மட்டுமல்ல, தமிழராக பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய தமிழ் கலைக்களஞ்சியமாக இந்நூல் வெளியாகியிருக்கிறது. 

நூலினை வாங்குவதற்கு : புதிய அரசியல் பதிப்பகம், சென்னை - 34 , அலைபேசி எண் : 9003118333 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss writes book about tamil language


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->