24 மணி நேரத்தில் 24 மில்லியன் - அரபிக்குத்து பாடலை பின்னுக்குத் தள்ளிய அரபிக் குத்து.!
whistle podu song reach 24 million views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கு கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே நடிகர் விஜய் தாம் ஒப்புக்கொண்ட ஒரு சில திரைப்படங்களை வேகமாக முடித்துக்கொடுத்தும் வருகிறார். அதில் ஒன்றான கோட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடாக நேற்றைய தினம் ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் பாடலில் விஜய் மட்டுமன்றி பிரபு தேவா, பிரசாந்த் என சக நடிகர்களும் நடனமாடுகின்றனர். இந்த நிலையில், இந்தப் பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக தென்னிந்திய திரைப்படங்களில் விஜயின் பீஸ்ட் படத்தில் வரும் “அரபிக் குத்து” பாடல் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
whistle podu song reach 24 million views