பா ரஞ்சித் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பா ரஞ்சித் அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து இயக்க உள்ள படத்தில் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தாராம். ஆனால், அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay missed pa Ranjith movie


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->