குக் வித் கோமாளி சிவாங்கிக்கு கல்யாணமா?  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக வந்த சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சோஷியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தைப் பிறக்கப் போகிறது என எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என் நண்பர்களுடைய பதிவும் அப்படித்தான் இருக்கிறது. அப்போது நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?” என்றுக் கேட்டுள்ளார்.

சிவாங்கியின் இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிவாங்கிக்குத் திருமண ஆசை வந்துவிட்டது, ‘சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க!’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணம் உறுதியானதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivangi post marriage update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->