சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்..
Today gold price
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 53 ஆயிரத்து 920 விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 6740 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 97.50 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 97 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.