கே.ஜி.எஃப் படத்தை மிஞ்சும் என் படம்.! கேன்ஸ் படவிழாவில் ரஞ்சித் பேச்சு.! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார். 

கடைசியாக அவரது இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது, நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித் இயக்கிய முடித்துள்ளார். இதன் பின்னர் சியான் விக்ரம் நடிக்கும் சீயான் 61 படத்தை இயக்குகிறார்.இந்த நிலையில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் விக்ரமின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த படம் கே.ஜி.எஃப் படம் போலவே தங்க சுரங்கத்தை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்றும், இதற்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயாராக இருந்தாலும், கே ஜி எஃப் படங்கள் வெளியாகும் வரை தான் காத்திருந்ததாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranjith direct new movie by vikram


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->