GOAT பட பாடல் - நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வபோது வெளியாகி வரும் சூழலில், நேற்றைய தினம் கோட் படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. இந்தப் பாடல் வெளியானவுடன் சட்டென டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “நடிகர் விஜய் பிரச்னையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்படுகிறார். லியோ படத்தில் கூட போதையை ஆதரித்து பாடலை வெளியிட்டார். தற்போது, தனது சொந்த குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருக்கிறது.

பார்ட்டி ஒண்ணூ தொடங்கட்டுமா என்ற வரிகள் வரும்போது, தணிக்கை குழு வாரிய விதிகளின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக வரும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வர வேண்டும். ஆனால், இதில் வரவில்லை. 

நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல், தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக விஜய் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. மைக்கை கையில் எடுக்கட்டுமா போன்ற வரிகளில் தமிழ்நாடு அரசியலில் சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்றவர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை எடுக்கட்டுமா என ஒருவரை புண்படுத்தும் வகையில் பாடுகிறார். 

தனது பாடல்களில் இளைஞர்களிடம் ரத்த வெறியை தூண்டுகிறார். ஆகவே, விசில் போடு பாட்டை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படியும், மேலும் நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petition against actor vijay for goat movie song lyric


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->