#BigBreaking || நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என்றும், மறுதேர்தல் தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. 

அந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், "தங்களுக்கு முறையாக அழைப்பானை விடுக்கவில்லை என்றும், தேர்தல் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை" என்று, நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், முதலில் தேர்தலுக்கு தடை விதிப்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தது. பின்னர் போலீசார் பாதுகாப்புடன் சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதற்கு அனுமதி தந்தது. 

தேர்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர்கள் மேலும் ஒரு வாழ்க்கை தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் தேர்தல் நடத்துவது செல்லாது என்றும் மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்கள் கொண்ட வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, மூன்று மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் , அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம் தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக ஒரு நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர் விஷால், கார்த்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்  ஏற்கனவே பதிவாகி வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை 4 வாரத்தில் என முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nadikar sangam election court judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->