''இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.! கர்ர்ர்ர்ர், த்து, எடு அந்த வெளக்கமாறுகட்டய.! மானமுள்ள மதுரை தமிழச்சிகள்.!! - Seithipunal
Seithipunal


பெண்கள் காரி துப்பும் அளவுக்கு ஒரு படம் வெளியாகி உள்ளது. இதனை தமிழகத்தில் ஒரு இளைஞன் கூட கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

வீரம் உள்ள தமிழச்சிகளை விலைமாது என்று நினைத்து படம் எடுத்தீரோ., கர்ர்ர்ர்ர்ர் த்தூ., எடு அந்த வெளக்கமாறுகட்டய., மானமுள்ள மதுரை தமிழச்சிகள் ''இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'' படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தாம்பத்தியம் என்பது எவ்வளவு புனிதம் என்பதை உலககுக்கு உணர்த்தியவன் தமிழன். ஆனால், இன்றைய தலைமுறையை காமம் என்ற போதை ஏற்றி, தமிழ் சமூகத்தை சீரழிக்க அண்மை காலமாக திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

அதிலும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், காட்சிகள் அமைத்தும், இரட்டை அர்த்த வசனங்களும் இடம் பெறும் வகையில் திரைப் படங்கள் வெளியாகின வருகின்றது. இதுபோன்ற திரைப்படங்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் செய்யும் புண்ணியவான்களில் பாமக என்ற ஒரு கட்சி மட்டும் குரல் கொடுத்து உள்ளது.
 
இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ்டர்கள் மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை பார்த்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்ட அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ்டர்களை கிழித்தனர். பின் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப்பட்டது. 

ஆனால் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் தன்னை ஒழுக்கம் உள்ளவள் போல் முகமூடி அணிந்து கொண்டு இருக்கும் இளைய சமுதாயமே. நாளை உனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் அதன் வலி உணர்வாய். 

சிலர் திரை படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று., அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களிடம் நேரம் இல்லை. தூங்குறவுண எழுப்பலாம். தூங்குற மாதிரி நடிப்பவனை., 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai womens protest against ivanukku enkayo macham irukku


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->