அவர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும் - அமித் ஷா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் அடுத்த மாதம் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. 

தெலுங்கானாவில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிர சமிதி, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி மேடக் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தெலுங்கானாவில் டி ஆர் எஸ் மற்றும் காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோர்த்து மக்களை ஏமாற்றுகிறது. 

மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுத்தால் தெலுங்கானாவை ஊழலில் இருந்து விடுவிப்பார். காங்கிரஸ் மற்றும் டி ஆர் எஸ் கொண்டு வந்துள்ள முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்டி, எஸ் சி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says Muslim reservation abolished 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->