தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை.!!   - Seithipunal
Seithipunal


பிப்ரவரி 22 அன்று வெளியான அரசியல் திரைப்படமான எல்கேஜீ (LKG) திரைப்படம் வெற்றிப்படமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்துவிட்டது. 

ரேடியோ ஜாக்கி பாலாஜி நடிப்பில் கேஆர் பிரபு இயக்கிய படம் எல்கேஜி. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், ஜே.ஜே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இது அரசியல் படம் என்றாலும் ஒரு நல்ல கருத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

நம்மை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை, எளிமையாகவும், நம்ப கூடிய முறையிலும் கட்சி அமைப்புகள் படத்தில் அமைக்கப்பட்டு இருந்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. படம் வெளியானது முதல் நாளே படம் வெற்றி படம் என்று வெளியான தகவல்கள் படத்திற்கு வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் வாங்காமல் நடித்த கதையின் நாயகன் ஆர்ஜே பாலாஜி, நல்ல லாபம் கிடைத்துள்ளதால்,லாபத்தின் ஒரு பகுதியை சம்பளமாகப் பெறவுள்ளார். இந்த திரைப்படம் 
3.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ஆனால், வெளியான முதல் மூன்று நாள்களில் ரூ. 8.80 கோடி வசூலை அள்ளிக்கொடுத்துள்ளது இந்த திரைப்படம். படம் வெளியாகி 25-வது நாளை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ. 16.60 கோடியம், உலக அளவில் 20 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.



 

திரையிட்ட அனைத்து திரையரங்குகளுக்கு லாபம், வெற்றி என்று படத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. முத்தாய்ப்பாக, ஊழல், லஞ்சம் என்ற சொல்லை கெட்ட வார்த்தை என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம் என்ற கருத்தை இந்த திரைப்படம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG 25TH DAY COLLECTION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->