விளம்பரம் கொடுத்து பெண் தேட உள்ள பிரபல நடிகர் : வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


இளம் ரசிகைகளின் மனம் கவர்ந்தவர் பிரபல நடிகர் ஆர்யா. இவர் தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தன தேவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் இவர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்திலும் நடிக்க இருக்கிறார். நடிப்பை தவிர ஆர்யா எப்போதும், தன்னுடைய உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

இதற்காக எந்நேரமும் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட், சைக்ளிங் ஆகியவற்றில்  நேரத்தை செலவழித்து வருவார். தற்போது ஆர்யா ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்  வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஆர்யா தனது நண்பரிடம் தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மேயில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன். என்று கூறியிருக்கிறார். 

காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்யலாம்ல என்று அவரது நண்பர் ஆர்யாவிடம் கேட்க, சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்..? அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்று ஆர்யா கூறியிருக்கிறார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arya Jim workshop is currently spreading on social networks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->