படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா..? தென்னிந்தியாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை..! - Seithipunal
Seithipunal


ஹீரா ராஜா கோபால்,  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார்.

அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்.

ஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

தல அஜித்தும் இவரும் காதலித்து வருவதாக இவர்கள் இணைந்து நடித்த காலத்தில் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.

 தற்போது ஹீரா ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்து பலருக்கும் வேலை கொடுத்து உதவி வருகிறார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress heera rajagopal's current status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->