கதாநாயகி இல்லாமல் களத்தில் இறங்கிய கார்த்தி! - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று அழைத்து வருகின்றனர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து  வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் கார்த்தியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.

சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரண்டாவது படம் இந்த படம் ஆகும். கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள்க்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் படமாக மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக இருக்கிறது. சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படத்தின் படபிடிப்பு நடக்கயுள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthi next movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->