வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை: இன்றைய நிலவரம்...
Today gold price
கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 ரூபாய் உயர்ந்து ரூ. 6805 க்கும் ஒரு சவரன் ரூ 640 உயர்ந்து ரூ. 54,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு .ரூ 1.50 காசுகள் உயர்ந்து ரூ. 90 க்கும் ஒரு கிலோ ரூ. 90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.