ஒன்றை கிளறினால், ஆயிரம் கிளம்புதே..!! கூண்டோடு சிக்கும் பா.ஜ.க, தப்பிக்க வழியே இல்லை..!! செக் வைத்த ஆளு யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal

அமிட்ஷா மகன் விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவரும் போலிருக்கிறது. அமித்ஷாவின் மகன் கம்பெனி விஷயம் இப்பொழுது அதிகம் விவாதிக்கப்படுகிறது. இதுவரை ஊழல் என்று சொல்ல முடியாத நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த செய்தி முதன் முதலில் தி ஒயர் (THE WIRE) என்ற இடதுசாரி இணையத்தில்தான் ரோஹினி சிங் என்பவரால் எழுதப்பட்டது. இதை எல்லா ஊடகமும் ஒரு சத்திய வாக்காக எண்ணி விவாதமும் தொடங்கிவிட்டார்கள் ஆனால் கார்த்திக் சிதம்பரம் கதை மட்டும் காத்தோட போயிடுச்சு... சரி விசயத்திற்கு வருவோம் இதை விளக்கும் முன் எழுதியவரை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.. காரணம்? எந்த செய்தியானாலும் யார் சொன்னது என்பது இங்கு முக்கியம் என்பதே . அதனால் எழுதியவரை பற்றி சிறு குறிப்பு... இவர் முதன் முதலில் ஒரு ஒரு பத்திரிக்கையாளராக அறிமுகமானது எகனாமிக்ஸ் டைமில்தான். 2017ம் ஆண்டு உத்திரபிரதேச தேர்தலை கணித்து எழுதி பலரை நம்ப வைத்தார் ஆனால் அது முற்றிலும் தவறான கணிப்பாக மாறி போனது.. இவர் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் அவர்களை குறிவைத்து அவரின் அரசு செயல்பாடில் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டி எழுதி மூக்குடைப்பு பெற்றார் என்பது கூடுதல் தகவல். உபி தேர்தல் கட்டுரைகளுக்கு பிறகு இவர் அதிகம் வெளியே தலைக்காட்டவில்லை அதோடு இவரின்  மீடியாவிலும் தலைக்காட்டுவதை நிறுத்திக் கொண்டார்... இன்று மீண்டும் இவரின் ஆர்டிகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அது தி ஒயர் (THE WIRE) இணையதளத்தில் இவர் எழுதிய அமித்ஷாவின் மகனை பற்றியது... ஆனால் அமித்ஷாவின் மகனை பற்றிய விவரம் உண்மையா? அல்லது பொய்யா?? என்பது பற்றி விசாரணை கமிஷன் வைத்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.. சொத்து மதிப்பு உயர்வு பற்றிய கட்டுரை கடந்த ஞாயிற்றுகிழமை அதாவது அக்டோபர் 8 ஆம் தேதி வெளியிட்டது. 9 ஆம் தேதி , அந்த இணையதளத்தின் மீது வழக்கு தொடுப்பதாக, அவர் மகன் தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார். ஆனால் அக்டோபர் 6 ஆம் தேதியே, மத்திய சட்ட அமைச்சகம், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேத்தாவிற்கு, தி ஒயர் (THE WIRE) இணையதளத்தின் மீது 100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடுக்க அனுமதி அளித்திருக்கிறது. அது எப்படி செய்தி வருவதற்கு முன்னரே, வழக்கு தொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.ஆக முன்னரே, அவர்கள் இந்த செய்தியை வெளியிட விடாமல் தடுத்திருக்கலாம். தனியார் வழக்குகளுக்கு, அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என்று மோடி அரசு, 2014 ஆண்டு அக்டொபர் 24 ஆம் தேதி அலுவலக குறிப்பானை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அப்படி இருந்தும், சட்ட அமைச்சகம் எப்படி ஒப்புதல் அளித்தது. அவ்வளவு முக்கியத்துவம் என்ன? அமிட்ஷா கேரளாவில் நடத்தவிருந்த பேரணியில், ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டு, அவசர வேலை நிமித்தமாக டெல்லி சென்றார். ஊடகத்திற்கும் நரேந்திர மோடி அழைப்பின் காரணமாக சென்றதாக கூறினார். அந்த அழைப்பிற்கும்,இந்த கட்டுரைக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். பிஜேபி ஊடக செய்தி தொடர்பாளர்கள் கூட,இந்த விசயம் சம்பந்தமாக, எந்த செய்தி தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்த பட்டிருக்கவேண்டும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal



கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->