புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் உலக மக்கள்!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.03 கோடியை தாண்டியுள்ளது. 

நாளுக்கு நாள் கொரோனா பரவல் உலக முழுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,03,49,591 தாண்டியுள்ளது.இதில், 73,60,448 பேர் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகம் முழுவதும் தற்போதுவரை, 2,20,38,588 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 9,50,555 பேர் உயிரிழந்துள்ளனர், 61,129 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 68,74,596 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில இந்தியா உள்ளது. இந்தியாவில் 52,12,686 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில உள்ள பிரேசிலில் 44,57,443 பேரும், நான்காவது இடத்தில உள்ள ரஷியாவில் 10,85,281 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wide corona update sep 18


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->