உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதல் மிருகத்தனமானது - அமெரிக்க அதிபர் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தின.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள நகரங்களின் மீது ஒரே நாளில் 75 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் தலைநகரம் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதல் மிருகத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தங்களின் கூட்டணி மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு பாடம் புகட்டுவோம் என்றும், உக்ரைனில் புரிந்து வரும் போர் குற்றங்களுக்கு அதிபர் புடின் மற்றும் ரஷ்யாவை பொறுப்பேற்க வைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் ராணுவம் தங்களது நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Us president says Russia attack on Ukraine is brutal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->