இஸ்ரேல் vs ஹமாஸ் || போரை நிறுத்துவாரா? அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரெனக் தாக்குதல் நடத்தி பலரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 12 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது இஸ்ரேலுக்கு சென்றடைந்துள்ளார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்டிப்பிடித்து வரவேற்றார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் காசா மீதான போரை நிறுத்துமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden arrived in Israel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->