பிரேசில் நாடாளுமன்ற வன்முறை - அமெரிக்க அதிபர் கண்டனம் - Seithipunal
Seithipunal


பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.

ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த போல்சனேரோ, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட செய்தியில், பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன்.

மேலும் பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது என்றும், அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Condemns Brazil Parliamentary Violence


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->