மறுஜென்மம் புகழ் அண்டர்டேக்கர்! முடிவுக்கு வந்த சகாப்தம்!  - Seithipunal
Seithipunal


ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் கடந்த 30 வருடங்களாக மிகப்பெரிய சகாப்தம் என்று வர்ணிக்கப்பட்டு வரும் அண்டர்டேகர், நேற்றுடன் (ஜூன் 21) ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது தொலைக்காட்சி ஒன்றில் 'அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட்' என்கிற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது அண்டர்டேகரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஆவணப்படம் ஆகும். இந்த ஆவணப்படத்தின் கடைசிப் பகுதியில், தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அண்டர்டேகர் தெரிவித்துள்ளார். 

"என்றும் முடியாது என்று சொல்லக்கூடாது தான், ஆனால், மீண்டும் அந்த மேடையேறும் எண்ணம் எனக்கு இல்லை. அந்த பயணத்தை முடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். இதற்குமேல் நான் சாதிக்க எதுவும் இல்லை. வெற்றி பெறவும் எதுவுமில்லை. 

ஆட்டமும் மாறிவிட்டது. புதியவர்கள் வருவதற்கான நேரம் அமைந்துவிட்டது. நான் வெளியேறுவதற்கு இதுதான் சரியான நேரமாகத் தோன்றுகிறது. இந்த ஆவணப்படம் மூலம் அதனை புரிந்துகொள்கிறேன். வாழ்க்கையின் அடுத்த பாகத்தைப் பார்க்க என் கண்களை, இந்த ஆவணப்படம் திறந்திருக்கிறது" என்று அவர் பேசியுள்ளார்.

அண்டர்டேகரின் இயற்பெயர் மார்க் வில்லியம் காலவே என்பது ஆகும். 1990-ம் ஆண்டு WWE என்னும் உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளில் அறிமுகமானார். கடைசியாக இவர் வரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடினார். அதில் வெற்றி கண்டார். இதுவரை வரெஸிமேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்டர்டேகர் மறு ஜென்மம் எடுத்து வந்து விளையாடுகிறார் என விளையாட்டாக பேசிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

undertaker retired from international wrestling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->