போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்.!

ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 19 ஆயிரத்துக்கும் மேலான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியுள்ளது. 

அதில், 328 குழந்தைகள் மட்டுமே இதுவரைக்கும் மீட்கப்பட்டுள்ளனர் என்று ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்கு மறுப்புத் தெரிவித்த ரஷியா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக தெரிவித்தது.

இதற்கிடையே உக்ரைன் சார்பில் குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ரஷ்யா ஆஜராகாததால் அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவரவரின் பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்' என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உக்ரைன் அரசிங்கம் தெரிவித்ததாவது:- "அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்" என்றுத் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine government launches new mobile app for found missing childrens


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->