என் முதல் பணி இதுதான் - பிரிட்டனின் புதிய பிராமரின் முதல் வாக்குறுதி! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்தார். 

அப்போது, மன்னர் மூன்றாம் சார்லஸ், ரிஷி சுனக்கை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், பிரதமராக பதிவியேற்றுக்கொண்ட ரிஷி சுனக், அந்நாட்டு மக்களுக்கு முதல் முறையாக தனது உரையை சற்றுமுன் ஆற்றினார்.

அதில், "நம் நாட்டின் (இங்கிலாந்து) பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன். என்னுடைய பணிகளால் நம்  நாட்டைப் பெருமைப்படுத்துவேன். 

வரும் காலங்களில் கடினமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நாட்டிற்காக இரவு பகல் பாராமல் உழைப்பேன். என்னுடைய நடவடிக்கை நாட்டை ஒருங்கிணைப்பதாக இருக்கும். 

என்னுடைய செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். நான் வழிநடத்தும் இந்த அரசாங்கம் அடுத்த தலைமுறையினரையும், உங்கள் பிள்ளை, பேரக்குழந்தைகளையும் காக்கும். எனது பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து, கட்சியின் முக்கிய கோட்பாடுகளைச் செயல்படுத்துவேன்" என்று மக்கள் முன் புதிய பிரதமர் ரிஷி சுனக் 
உரையாற்றினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UK PM Rishi Sunak 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->