கொரோனா நோயாளிகளை கண்டறியும் கே-9 மோப்ப நாய்கள்..!! - Seithipunal
Seithipunal


குற்ற புலனாய்வு துறைகளில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் மோப்ப நாய்களின் பங்கு இன்றியமையாமல் இருந்து வருகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் காவல்துறை மற்றும் இராணுவத்தில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நாய்களின் படைகள் கே-9 (கேனைன்) என்று அழைக்கப்படுகிறது. பிற நாடுகளை போல அமீரகத்தில் கே-9 மோப்ப பிரிவு நாய்கள் சிறப்புடன் பணியாற்றி வருகிறது. அமீரகத்தில் கடந்த 1976 ஆம் வருடம் முதலாக இந்த மோப்ப நாய்கள் பிரிவு துவங்கப்பட்டு, காவல் துறையில் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த மோப்ப நாய் படையில் ஜெர்மன் செப்பர்டு, மாலினோய்ஸ் மற்றும் லாப்ரடர் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த நாய்களுக்கு மூக்கில் 25 கோடி உணரும் செல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைப்போன்று வாசனையை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும் ஆற்றலையும் கொண்டுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று இருக்கும் பொருட்களை கண்டறிய பயிற்சி வழங்கப்பட்டது. இந்த சோதனை தற்போது நடைபெற்று வருவதாக அமீரகம் தெரிவித்துள்ளது. 

மேலும், மனித உடலின் வியர்வை வெளியேறும் முறைகளில் உள்ள வாசனையை சேகரித்து, மோப்ப நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாய்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுஇடங்கள் மற்றும் விமான நிலையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமீரக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE Police dogs identify covid patients


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->