அமெரிக்காவில் இந்திய மாணவிகள் 2 பேர் கைது - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த இருபது வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த இருபத்திரண்டு வயது உடைய மாணவி ஒருவரும் அமெரிக்கா நாட்டில் உள்ள நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இருவரும் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். இது குறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் ஹோபோக்கன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறியுள்ளார். 

இருப்பினும், இரண்டு மாணவிகளும் தவறு செய்திருப்பது நிரூபணமாகி உள்ளதால் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two indian students arrest in america


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->