அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பயங்கர புயல் - 26 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல் வீசி வருகிறது. இந்த பனிப்புயலால் நாட்டியல் உள்ள பல்வேறு மாகாணங்கள் பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  

இந்த நிலையில், நேற்று முன்தினம் மிசிசி்பி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்ததில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த புயல் மற்றும் மழையால், ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் அந்த மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டம், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து, மீட்பு குழுவினர் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளன. 

இந்த பயங்கரமான புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளன நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்புப்படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் புயலில் மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் நில நடுக்கத்தை தொடர்ந்து தற்போது பயங்கர புயல் வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் இது அங்குள்ள பொது மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty six peoples died in america for storm


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->