பழங்குடியின மக்களை கொன்று குவித்த வேட்டைக்காரர்கள்.! வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்.!! 37 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குபவர்கள் பயங்கரவாதிகள். இவர்கள் ஆதிக்கத்தை அப்பாவி மக்களை இரக்கமே இல்லாமல் கொன்று குவித்து வருகின்றனர். 

ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பகுதிகளில் பழங்குடியினருக்கும் - கால்நடை தொழில் செய்பவர்களுக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. 

அந்தவகையில்., மேற்காபிரிக்க நாடுகளில் இருக்கும் மாலியின் மத்திய பகுதியில் மோப்தி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புலானி என்னும் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 

அதே பகுதியில் கால்நடை தொழிலை மேற்கொள்பவர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் பிரச்சனையில்., ஆயுதம் ஏந்திய கால்நடை தொழிலாளர்கள் அவர்களை கொண்டு குவித்து வருகின்றனர். 

இந்நிலையில்., நேற்று அந்த கிராமத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த வேட்டைக்கார்கள் அங்குள்ள மக்களை இரக்கமே இல்லாமல் சுட்டு வீழ்த்தினார். அவர்களை சுட்டுவீழ்த்தியது போதாதென்று அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 

இந்த சம்பவத்தில் சுமார் 37 பழங்குடியின மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., இந்த சம்பவத்திற்கு அரசு சார்பில் எந்த விதமான அறிக்கையும் தற்போது வரை வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tribes have a hardly attack on Africa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->