பெண்ணை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் குற்றமில்லை - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பெண்களை 10 வினாடிகளுக்கு குறைவாக தொடுவது பாலியல் குற்றமாகாது என்று நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது தனது வகுப்பறைக்கு செல்வதற்காக படிக்கட்டில் ஏறி சென்றுள்ளார். அப்போது தனது பின்பக்கமாக யாரோ தன்னைத் தொடுவது போன்றும், தனது ஆடையை கழற்றுவது போலவும் உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து உடனே திரும்பி பார்த்தபோது பள்ளியின் காவலாளி இச்செயலை செய்துள்ளார். மேலும் விளையாட்டாக இந்த செயலை செய்ததாக சிறுமியை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். காவலாளியின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் சம்மதமின்றி தொட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி ஆனால் விளையாட்டாக தான் தொட்டேன் என கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் தரப்பில் வாதாடபட்டது.

ஆனால் மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாக பாலியல் ரீதியாக தொட்டதால் அதனை குற்றமாக கருத முடியாது எனக்கூறி அந்த காவலாளியை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touch a woman for less than 10 seconds not a crime of sex


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->