டாம் அன்ட் ஜெரி இயக்குனர் ஜீன் தீச் இயற்கையை எய்தினார்..!! சோகத்தில் திரையுலகம், 90 கிட்ஸ்..!! - Seithipunal
Seithipunal


நமது குழந்தை பருவத்தில் பெரும்பாலும் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக பல கார்ட்டூன் நிகழ்ச்சிகளை கண்டிருப்போம். இதில் பெரும் ஆவலுடன் நாம் கண்ட விஷயமாக டாம் அன்ட் ஜெரி நிகழ்ச்சி இருக்கும். இந்த நிகழ்ச்சி இன்றளவிலும் பலரால் காணப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியை உருவாக்கி இயக்கிய ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் ஜீன் தீச். இவர் இயக்குனர், படங்கள் வரைவார் என தன்னகத்தே பல திறமைகளை ஒளித்து வைத்த எளிமையான நபர் ஆவார். 

இவர் டாம் அன்ட் ஜெரி மட்டுமல்லாது "பாப்பாய் தி செயலர் மென்" என்ற கதாபாத்திரத்தின் சில தொடரையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த 1924 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்தவர். 

பின்னர் அங்குள்ள செகலவெஸ்லியா மாகாணத்தில் உள்ள பராக் நகருக்கு 1959 ஆம் வருடத்தில் பணியின் காரணமாக சென்று, அங்குள்ள பெண்ணுடன் காதல் மலர்ந்ததை அடுத்து, அங்கேயே செட்டில் ஆகியுள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த 16 ஆம் தேதியன்று தனது இல்லத்தில் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tom and jerry director Gene Deitch died


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->