உலக சந்தையில் பதற்றம்…! கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியது...!
Tension world market Crude oil price crosses 110
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழியாகச் செல்ல முயலும் எந்த கப்பலையும் தாக்கி அழிக்க தயங்கமாட்டோம் எனவும் ஈரான் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் சுமார் 20% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடத்தப்படுகிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் இந்த கடல்வழிப் பாதை மூலம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
2022-க்குப் பிறகு முதன்முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டியுள்ளது.
போர் நிலை தொடர்ந்தால் எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Tension world market Crude oil price crosses 110