லண்டனில் சுரங்க ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்.! பொதுமக்கள் அவதி - Seithipunal
Seithipunal


பன்னாட்டு சந்தைகளின் சரிவு மற்றும் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக இங்கிலாந்தில் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் விலையேற்றத்தை சமாளிக்க ஊதியத்தை உயர்த்த வேண்டுமென ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்திய கோரிக்கையை அரசு நிராகரித்த நிலையில், ஊழியர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து சுரங்க ரயில்வே நிலைய ஊழியர்கள் தலைநகர் லண்டனில் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் லண்டன் நகர் முழுவதும் சுரங்க ரயில் சேவை பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஊழியர்களின் போராட்டத்தினால் ஐந்தில் ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுவதாக உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subway train employees strike for wage hike in London


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->